கடந்த
சில நாட்களாக இருவருக்கும் உள்ள மனகசப்பு பற்றி வைகோ கருத்து எதுவும்
தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மதுரையில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல
திருமண விழாவுக்கு வைகோ இன்று (05.12.2012) வந்தார். அப்போது
செய்தியாளர்கள் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி
எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த வைகோ, என்னிடம் கேட்காதீர்கள். செய்தியும் போடாதீர்கள் என்றார்.வைகோவுடன்
காரில் உடனிருந்தவர்கள், நாஞ்சில் சம்பத்தை பற்றி கேட்டு அவரை பெரிய
ஆளாக்காதீர்கள். அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள் என்று
செய்தியாளர்களிடம் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக