சனி, 15 டிசம்பர், 2012

தனுஷ்கோடி யில் காற்றாலைகள்?

மின்வெட்டு பிரச்சி னைக்கு தீர்வு காணும் வகையில், கடல்பகுதி யில் காற்றாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசு திட்ட மிட்டுள்ளன. இந்நிலை யில் காற்றின் வேகத்தை கணக்கிட தனுஷ்கோடி யில் 100 மீட்டர் உயரத் தில் அதிநவீன கருவி 6 மாதத்தில் அமைக்கப் பட உள்ளது.
இந்தியாவில் 7,000 கி.மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பரப்பளவு உள்ளது. இதில் பெரும் பாலான இடங்களில் காற்றாலைகளை அமைக்கமுடியும். ஆனால், எங்கெல்லாம் காற்றாலை அமைக்க முடியும் என்பதை முத லில் கண்டறிய வேண் டும். காற்றின் வேக அளவு, எந்த திசையில் இறக்கைகள் அமைக்க லாம் போன்ற பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ளது. தமிழ் நாட்டில் தனுஷ்கோடி யில் 100 மீட்டர் உயரத் தில் அதிநவீன கருவி அமைக்கப்பட உள்ளது.
6 மாதத்தில் இதற்கான பணிகள் தொடங்கப் பட உள்ளன.
இதுதொடர்பாக காற்றாலை வல்லுநர் கிரி கூறியதாவது:
பருவ நிலைக்கான தேசிய திட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின்உற்பத்தியில் 20 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இடம்பெற வேண்டுமென அறிவுறுத் தப்பட்டுள்ளது. இந்நி லையை அடைய ஆண்டு தோறும் 8,000 மெகா வாட் அளவு மின்உற்பத்தி பெறும் வகையில் மின் நிலையங்கள் அமைக்கப் பட வேண்டும்.
அதாவது, பயோ கியாஸ், சூரிய ஒளி, காற் றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய வேண் டும். இதை கருத்தில் கொண்டு மாநில அர சுகள் புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் மின் னுற்பத்தி செய்ய கள மிறங்கியுள்ளன.கட லோர பகுதிகளில் காற் றாலை அமைப்பது நல்ல திட்டம் தான். ஆண்டு முழுவதும் மின்னுற்பத்தி செய்ய முடியும்.ஆனால், எல்லா இடத்திலும் அதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கு ஏற்ற பகுதிகளை கண்ட றிய வேண்டும். காற்றின் வேகத்தை கணக்கிட வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் தனுஷ் கோடியில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டு ஆய்வு நடத்தவுள்ளது. ஒரு இடம் மட்டுமே போதாது, இதுபோல், பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த வேண்டும். மேலும், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஆய்வு நடத்திய பின்னர், அதன் புள்ளி விவரங்களை ஒப் பிட்டு பார்க்க வேண்டும்.
அதன் பின்னரே அதற் கான சாத்தியக் கூறுகள் தெரியவரும். கடல் காற் றாலைக்கான கட்டுமா னங்கள், தொழில்நுட் பங்களும் இந்தியாவி லேயே கிடைக்கிறது. இந்த திட்டம் மற்ற நாடு களை விட, ஜெர்மனியில் சிறப்பாக உள்ளது.
இந்தியாவில் தரை பகுதியில் தற்போது 18,000 மெகா வாட் அள விலான காற்றாலை நிறுவுதிறன் இருக் கிறது. இதில் தமிழ் நாட்டில் மட்டும் 7,000 மெகா வாட் அளவுக்கு உள்ளது. ஆனால், தரை பகுதியில் இன்னும் 1.10 லட்சம் மெகா வாட் அளவுக்கு காற்றாலை அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.
கடல்காற்றின் வேகம் கணக்கீடு செய்து கடல் பகுதிகளில் காற்றா லைகள் அமைக்க குறைந் தது 3 ஆண்டுகள் ஆகும் என காற்றாலை வல்லு நர்கள் கூறுகின்றனர்.
-இவ்வாறு அவர் கூறினார்  www.viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக