ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நயன்தாரா இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு

பிரபு தேவாவை டென்ஷனாக்க ஒரு செய்தி நயன்தாரா  இந்திப் படங்களில் நடிக்க நல்ல வாய்ப்பு  வந்துள்ளது . செல்வாக்கு மிக்க ஆணாதிக்க வாதிகள் அதை குழப்பிவிடக்கூடும் என்பதால் மௌனமாக உள்ளார். தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட அனுபவம் தனக்கும் ஏற்பட்டுவிட கூடாதல்லவா ? அதற்கு முன்னோட்டமாக தனது தெலுங்குப் படமான 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொள்ள, அவர்களும் நயன் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் உள்ளனர்.
இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நட்சத்திர குழுவினருடன் மும்பையில் முகாமிட்டுள்ளார் நயன் ஏற்கெனவே ஹைதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு மும்பைக்குப் போய்விட்டார் பிரபு தேவா. இப்போது அவரது பாணியிலேயே, மும்பையில் தனக்கென தனி ப்ளாட் பார்க்கச் சொல்லியிருக்கிறாராம் நயன்.தமிழ், தெலுங்கில் இன்னமும் முன்னணியில் உள்ள நயன், அதே மாதிரி ஒரு இடத்தை இந்தியில் பிடிக்காமல் திரும்பப் போவதில்லை என்று சபதமே போட்டிருக்கிறாராம்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக