வெள்ளி, 7 டிசம்பர், 2012

யாருக்கோ பணியாததால் தான் புவனேஸ்வரியை மகா மோசமானவராக

சென்னை:அடிதடி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நடிகை புவனேஸ்வரி மீது, ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், இரண்டு வழக்கறிஞர்களுடன், இரவு காட்சிக்கு, புவனேஸ்வரி சென்றார். அங்கு ஏற்பட்ட பிரச்னையில், புவனேஸ்வரியுடன் வந்தவர்கள், போலீஸ் உட்பட அனைவரையும் அடித்து உதைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்குகள் பல விதம்
புவனேஸ்வரி மீது, மத்திய குற்றப்பிரிவில், 18க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த புவனேஸ்வரியின்  தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி போலீஸ் பத்திரிகைகளுக்கு கசியவிடும் செய்திகளை பார்க்கும்போது சில சந்தேகங்கள் வருகின்றன யாருக்கோ பணியாததால் தான் புவனேஸ்வரியை மகா மோசமானவராக காட்டும் முயற்சி நடை பெறுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது .யாரின் விருப்பத்தை அவர் பூர்த்தி செய்ய வில்லை என்று காலம் சொல்ல வேண்டும் 
இது தவிர, அசோக் நோதா என்ற கார் øபான்சியரிடம், இரண்டு சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து, 10 லட்ச ரூபாய் தராமல் ஏமாற்றிய வழக்கு உள்ளது.
மேலும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்புக்கு என, 15 லட்சம், போரூரைச் சேர்ந்த லட்சுமி என்பவரது மகளை, சினிமாவில் நடிக்க வைக்க, 40 லட்சம், வடசென்னையைச் சேர்ந்த ரகுமானிடம், ஐந்து லட்சம், மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயமோகன் என்பவரிடம், 23 லட்சம் ரூபாய் மோசடி செய்து, மிரட்டல் விடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இது தவிர, வேறு எந்தெந்த காவல் நிலையங்களில், வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது போன்ற விவரங்களை, போலீசார் தூசு தட்டத் துவங்கியுள்ளனர். இதனால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் காவலில்
ஒன்றரை கோடி ரூபாய் மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரியை, சைதாப்பேட்டை கோர்ட்டில், போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தியேட்டர் முன், அடிதடி தகராறில் ஈடுப்பட்டு, பெங்களூருக்கு காரில் தப்பிச் சென்ற நடிகை புவனேஸ்வரியை, ஆம்பூர் அருகில் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
புதிய வழக்கு தொடர்பாக, நேற்று சைதாப்பேட்டை, 11வது கோர்ட்டில், புவனேஸ்வரியை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் சிறைக்காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் முருகன் உத்தரவிட்டார்.
வழக்கு தொடர்பாக, புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால், அவரை, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, விசாரிக்க அனுமதி கேட்டு, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புவனேஸ்வரி தரப்பு வழக்கறிஞர், எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட பின், இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் முருகன் அனுமதி அளித்தார். கோர்ட்டிலிருந்து, வெளியே வந்த, புவனேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், "எனக்கு எதிராக சதி நடக்கிறது; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன்' என்றார். தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக