புதன், 5 டிசம்பர், 2012

புதிய வழக்கு: காரில் இருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி புடவையை கவர வந்த கயவர்!

கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது 2-வது வழக்கு பாய்ந்துள்ளது என்று செய்தி போட்டால், கிறுகிறுத்துப் போவீர்கள். “அவர்மீது இரண்டே இரண்டு வழக்குகள் மட்டும்தானா?” என்று மூக்கின் மேல் விரலை வைப்பீர்கள். எனவே விளக்கமாக சொல்லலாம். சமீப காலத்தில் அவர்மீது இரண்டாவது வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவ் இன் தியேட்டருக்கு தனது ஆதரவாளர்களோடு போய் பெரும் ரகளையில் ஈடுபட்டது, சமீப காலத்தைய முதலாவது வழக்கு. அதைத் தொடர்ந்து புவனேஸ்வரியும், அவரது ஆட்களையும் போலீஸார் கைது செய்தனர். தற்போது, ‘உள்ளே’ இருக்கிறார்.
இந்த விவகாரம் பைசல் பண்ணப்படும் முன்னர், இரண்டாவது வழக்கு பாய்ந்துள்ளது. மடிப்பாக்கம் விநாயகராஜ் என்பவர் புவனேஸ்வரி மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவகாரமும், ஒரு பக்கா கிரிமினல் கேஸூக்குரிய காரம், மணம், குணம் நிறைந்தவை.
மடிப்பாக்கம் விநாயகராஜூக்கு, புவனாவுடன் என்ன டீலிங்? “நடிகை புவனேஸ்வரியிடம் இருந்த ஒரு காரை கடந்த ஆண்டு ரூ.6 லட்சத்திற்கு வாங்கினேன். முதல் தவணையாக அந்த காருக்கு ரூ.5 லட்சம் தந்து விட்டு, காரை வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

ஆனால் மறுநாள் புவனேஸ்வரி அனுப்பியதாக கூறி ஒருவர் வந்தார். புவனேஸ்வரி விற்ற காரில், அவரது புடவை இருக்கிறது என்று சொல்லி அவர் காரை புவனேஸ்வரியின் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டார். மீண்டும் காரை திருப்பித் தரவில்லை. (ஏங்க, காரில் இருந்து புடவையை உருவ வேண்டுமென்றால், முழு காரையும் எதற்கு அந்த ஆள் எடுத்துச் சென்றார்? கார், புடவை உடுத்தியிருந்ததா? அல்லது, காரில் இருந்து புடவையை அகற்ற முடியாத அளவுக்கு, ‘கார்’ என்பது மற்றொரு அம்மணியின் பெயரா?)
இது குறித்து நான் போய்க் கேட்டபோது, புவனேஸ்வரி திரும்பத்தர மறுத்து விட்டார். (புடவையை அல்ல, காரை!) அத்துடன் அவரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டி அனுப்பி விட்டனர்” என்று கூறியுள்ளார் விநாயகராஜ்.
இந்தப் புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீஸார், புழல் சிறைக்குப் போய், ஏற்கனவே கைதியாக இருந்த புவனேஸ்வரியை மீண்டும் ஒருமுறை இந்த வழக்குக்காக கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டுக்குக் கொண்டு போய் நிறுத்தி அந்த வழக்கில் ரிமாண்ட் பெற்று மீண்டும் சிறையில் கொண்டு வந்து அடைத்தனர்.
புவனேஸ்வரி மீது ஏற்கனவே வெள்ளி விழா கொண்டாடக்கூடிய எண்ணிக்கையில் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றுடன் இந்த வழக்கும் சேர்ந்து கொள்ள, எண்ணிக்கை பொன்விழாவை நோக்கி பீடுநடை போடுகிறது. அம்மையாரை குண்டர் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற பேச்சும் இருந்து வருகிறது.
கரகாட்டக்காரன் பாணியில் ஒரு கேள்வி, எல்லாம் சரி, புவனேஸ்வரி காரை இப்ப யாரு வெச்சிருக்கா?http://viruvirupu.com/2012/12/05/39450/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக