சனி, 1 டிசம்பர், 2012

அஜீத்துடன் ஜோடி சேரும் தமன்னா!


Tamanna Is Ajith New Lady Love அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்க, வெங்கட்ராம ரெட்டி வழங்கும் பெயிரிடப்படாத புதிய படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.
தன்னை அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறும் இயக்குனர் சிவா, "படத்துக்கு கதாநாயகி தேடல் முடிவடைந்துவிட்டது. விதார்த், பாலா, முனீஷ், சோஹில், என்று இளம் நாயகர்கள் சிலர் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர். தமன்னா முதல் முறையாக அஜீத்துடன் ஜோடி சேருகிறார். நிர்ப்பந்தங்களை தூக்கி எறிந்து விட்டு தமன்னாவுக்கு மறு பிரவேசம் கொடுக்கும் தலை தலைதான் 

ஜெயராம், சந்தானமும் இப்படத்தின் நகைச்சுவைக்கு உத்தரவாதம், ஜெயப்பிரகாஷ், இளவரசு என்று குணசித்திர நடிகர்களும் உண்டு," என்றார்.
மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு நிறைவு நாளான டிசம்பர் 2 ஆம் தேதி இந்தப் படத்தின் பாடல் பதிவு நடக்கிறது. http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக