சனி, 22 டிசம்பர், 2012

நித்யஸ்ரீ கண்டிஷனில் ஒன்று சேர்ந்த கணவர்

பாடக்கூடாது என்ற கண்டிஷனா?பாடகி நித்யஸ்ரீ விவகாரத்தில் புதிய பூதம்: பிரிந்து வாழ்ந்த அவர்கள் ஒன்று சேர்ந்ததே ஒரு கண்டிஷனில்!

Viruvirupu
பாடக்கூடாது என்ற கண்டிஷனா?
பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருந்திருக்க கூடிய நேரம் இது. அந்த நேரத்தில், திடீரென்று அவரது கணவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் போலீஸார், மகாதேவன் சென்ற காரை ஓட்டிச் சென்ற டிரைவர் சுரேஷின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதன்பின் நித்யஸ்ரீயின் வாக்குமூலமும் பெறப்பட்டது. தற்போது, இவர்களது குடும்ப நண்பர் மற்றும் வெல்விஷர் ஒருவர் தாமே வலியப்போய் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் புதிதாக ஒரு பூதத்தை கிளப்பியிருக்கிறார் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
நித்யஸ்ரீயும், அவரது கணவர் மகாதேவனும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தார்கள் எனவும், அதன்பின் சில குடும்ப நண்பர்கள் இரு தரப்புடனும் பேசி, சமீபத்தில்தான் இருவரையும் சேர்த்து வைத்தனர் என்று கூறியிருக்கிறார் இந்த வெல்விஷர்.
அத்துடன் அவர் கூறிய மற்றொரு விஷயம், “இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு மகாதேவன் போட்ட கண்டிஷனே, நித்யஸ்ரீ இனி இசைவிழாவில் பாடக்கூடாது என்பதுதான். அதற்கு நித்யஸ்ரீயும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இசைவிழாவில் நித்யஸ்ரீயின் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதையடுத்து, இருவரையும் சேர்த்து வைத்த குடும்ப நண்பர் ஒருவரிடம் நியாயம் கேட்டார் மகாதேவன்” என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
இதையடுத்து, இந்தக் கோணத்திலும் போலீஸ் விசாரணை இருக்கலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக