செவ்வாய், 4 டிசம்பர், 2012

மாற்றுத்திறனாளிகள் தினத்தை புறக்கணித்த அரசு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.தங்கம் சென்னையில் இன்று (03.12.2012) செய்தியாளர்களிடம் பேசியதாவது,அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். கலைஞர் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்.
உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை அனுசரிக்கக் கூடிய இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முற்றிலும் இந்த அரசு புறக்கணித்துள்ளது. 22 லட்சம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை இந்த அரசு புறக்கணித்துள்ளது. இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு காரணம் என்ன சொல்லுகிறார்கள் என்றால், முன்னாள் பிரதமர் இறந்துவிட்டார் அதற்கு நாங்கள் தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு புறக்கணித்துள்ளது. ஏன் சட்டப்பேரவை வைரவிழா நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் பிரதமர் இறந்திருக்கிறாரே அப்போது வைரவிழாவை நிறுத்த வேண்டியதுதானே, துக்கம் அனுசரிக்க வேண்யதுதானே அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது இதனை காரணமாக சொல்லுகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலவாரியம் முடக்கப்பட்டது. கடந்த 10 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. உதவித்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக