வியாழன், 6 டிசம்பர், 2012

ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம்: மன்‌மோகன், சோனியா நம்பிக்கை

புதுடில்லி: புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ஓட்டெடுப்பில் லோக்சபாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார சீர்ததிருத்தத்திற்காக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பா.ஜ. உள்ளிட்ட எதிர்‌கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.http://www.dinamalar.com/
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அன்னிய முதலீட்டினை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துடன் ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி இன்று பாராளுமன்ற லோக்சபாவில் நடந்த ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. பா.ஜ. கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ஓட்டெடுப்பில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்தன. இரு கட்சிகளின் 43 எம்.பி.க்கள் ஓட்டளிக்கவில்லை.

தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சி்ங் கூறியதாவது: மத்திய அரசின்சீர்திருத்த கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ராஜ்யசபாவிலும் வெற்றி‌ பெறுவோம் என்றார்.

காங். ‌தலைவர் சோனியா கூறுகையில், மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு குறித்து நான் கவலைப்பட தேவையில்லை என்றார்.


முலாயம்- மாயாவதி மீது சுஷ்மா பாய்ச்சல்



இது குறித்து லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் , பேசுகையில், ஓட்டெடுப்பிற்கு ஆதரவாக முலாயம்சிங் யாதவும், மாயாவதியும் மறைமுகமாக செயல்பட்டனர். இதனால் ‌மத்திய அரசு வெற்றி பெற்றது. அவர்கள் வெளியே பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாக செயல்பட்டனர் என்றார். மத்திய அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் ஓட்டெடுப்பு நடக்கிறது.

மிகழச்சி அளிக்கிறது: கருணாநிதி:


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது குறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசினை கவிழக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்ட எதிர்க்கட்சிகளின் சதி முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு ஒட்டெடுப்பில் வெற்றி பெற்றது மகிழச்சி அளிக்கிறது என்றார்.

தொழில்துறை வரவேற்பு:

அன்னிய முதலீடுக்கு லோக்சபா ஓப்புதல் வழங்கியதற்கு இந்திய தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து எப்.ஐ.சி.சி.ஐ., தலைவர் கனோரியா கூறுகையில், அன்னிய முதலீடுக்கு லோக்சபாவின் ஒப்புதல் கிடைத்தது வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாடு தயாராக வேண்டும். அன்னிய முதலீட்டாளர்களுக்கு உறுதியான ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக