வெள்ளி, 21 டிசம்பர், 2012

தனியார் கட்டுப்பாட்டில் வங்கிகள் வர வாய்ப்புள்ளது

சென்னை:வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கி பணிகள் முடங்கின. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம், வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் நேற்று, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும், 5 லட்சம் பேரும், தமிழகத்தில், 40 ஆயிரம் வங்கி ஊழியர்களும் இதில் பங்@கற்றனர்.
"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' தவிர, மற்ற அனைத்து அரசுடமை வங்கி ஊழியர்களும், நேற்றைய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிகளில் பணபரிவர்த்தனைகள் உள்ளிட்ட, அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில், வங்கி ஊழியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர், பாலசுப்பிரமணியன் பேசியதாவது: சீனாவை போல், நம்நாட்டிலும் பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். 
 
சாமி - மதுரை,இந்தியா

அரசு வேலை என்றால் மந்தமாக செய்வீர்கள் தனியார் என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்னை பொருத்தவரை பஸ் ரயில் பேங் இது எல்லாம் தனியாரிடம் விடுவதே சரி சினிமா தியேட்டரை அரசு நடத்தலாம் http://www.dinamalar.com/
இதற்காக, தற்போதுள்ள, 26 அரசுடமை வங்கிகளை, 20 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.அதேசமயம் புதிதாக வங்கிகளை தொடங்குவதற்கு, தனியாருக்கு அனுமதி வழங்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பார்லிமென்டில் நிறை@வற்றப்பட்டுள்ள, புதிய சட்டதிருத்த மசோதாவின்படி, வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்றவர்கள் கூட, வங்கிகளின் இயக்குனர் பொறுப்புகளுக்கு வரமுடியும். இது அபாயமானது.மேலும், பங்குதாரர்களுக்கு அதிக ஓட்டுரிமை வழங்க வகை செய்யும், சட்டதிருத்தம் மூலம், வங்கியின் நடவடிக்கைகளை தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

இந்தியாவில், 2.25 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. இந்த கடன்களை, வசூலிக்கத் தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு செய்யவில்லை.வாராக் கடனாளிகளின் பெயர் பட்டியலை, வெளியிடுமாறு மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கை களையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவின் மூலம், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் படுவார்கள். குறிப்பாக மாணவர்களுக்கான கல்விகடன் வழங்குவது, அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க செய்வது போன்றவை பாதிக்கப்படும். எனவே வங்கிகள் சட்டத்திருத்த மசோதவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக