சனி, 8 டிசம்பர், 2012

செய்தி பொய்யாகிவிட்டது! வைகோ கட்சியில் வடிவேலு வரவில்லை

நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. தி.மு.க.,வுக்கு பிரச்சாரம் செய்த ஒரே காரணத்தால், பட வாய்ப்புகள் அறவேயின்றி, சினிமா துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, வடிவேலு தள்ளப்பட்டார். இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க., - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.;இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, இன்று (6.12.2012)  ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் திருச்சியில் நடைபெற்ற ’’நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதையடுத்து வைகோ கட்சியில் வடிவேலு இணைகிறார் என்று பேசப்பட்டது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று வடிவேலுவின் வருகையை எதிர்பார்த்து இருந்தனர். 

ஆனால் எதிர்பார்த்தபடி வடிவேலு இந்த விழாவிற்கு வரவில்லை.  இதனால் வைகோ கட்சியில் வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்து பொய்யாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக