புதன், 12 டிசம்பர், 2012

சினிமா நடிகனின் Birthday கொண்டாடும் தமிழன்

ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்திருப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நகரில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் களை கட்டியுள்ளன. ரஜினி ரசிகர்கள் கோவில்களில் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் சிறப்பு அர்ச்சனைகளை செய்து வருகின்றனர்."என் வழி தனி வழி".... , "நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"..... இவை நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள். இவைதான் ரஜினி ரசிகர்களின் தாரக மந்திரங்கள்t குடும்பத்தினரின் பிறந்தநாளை, திருமணநாளை நினைவு வைத்திருப்பார்களோ இல்லையோ தங்கள் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் நாளை நினைவு வைத்துக்கொண்டு கோவில்களில் சிறப்பு அர்ச்சனையும், பால்குடமும் எடுத்து கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள்.
மதுரைதான் ரசிகர்மன்றங்களின் தலைமையிடம் என்றால் இப்போது திருப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் ஆண்டுதோறும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விசேசமாக 12/12/12 என்று மூன்று 12 வருவதால் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாகிவிட்டது.
திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளெக்ஸ்பேனர்கள் ஜொலிக்கின்றன. ராகவேந்திரா ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள். பால் குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் திருவிழா போல ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக