கற்பழிப்பு புகார் கூறிய சினேகா சர்மா என்ற பெண் நடிகர் மன்சூர்
அலிகானுக்கு ரூபாய் 50 லட்சம் மான நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த சினேகா சர்மா என்ற பெண் கடந்த 1998ல் நடிகர் மன்சூர் அலிகான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கை
விசாரித்த சென்னை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு
கடுங்காவல் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 2001ல்
தீர்ப்பு கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான்
மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி 2007ல்
கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். மன்சூர் அலிகான் விடுதலை
செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
ஆனது. இதையடுத்து சினேகா சர்மாவிடம் ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கக்
கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்தார். இந்த
வழக்கை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். மன்சூர் அலிகான் மீது வேண்டுமென்றே
பொய் புகார் கொடுத்தது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்து. இதனால் மன்சூர்
அலிகானின் பெருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பொய் புகார் கூறிய சினேகா
சர்மா, மன்சூர் அலிகானுக்கு ரூபாய் 50 லட்சம் மான நஷ்ட இழப்பு தொகையாக
கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக