சனி, 8 டிசம்பர், 2012

உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்!


Viruvirupu
பிரிட்டிஷ் ஆயில் நிறுவனம் BP, உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி, உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தரையடி எண்ணை எண்ணை வளம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குவதற்காக, 100 மில்லியன் டாலர் பணம் செலவிடப்படவுள்ளது.
இவர்கள் உருவாக்கவுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் மெமரி, 1.5 லட்சம் iPodளின் மொத்த மெமரிக்கு சமமானதாக இருக்கும்!
BP-யின் சூப்பர் கம்ப்யூட்டர், புதிதாக அமைக்கப்படவுள்ள, “high-performance computing centre” ஒன்றில் அமையவுள்ளது. பிரிட்டிஷ் எண்ணை நிறுவனம் BP-யின் இந்த கம்ப்யூட்டிங் சென்னர், பிரிட்டனில் அமையவில்லை. மாறாக, BP-யின் அமெரிக்க தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஹியூஸ்டனில் (டெக்சாஸ் மாநிலம்) உருவாக்கப்படுகிறது.
மொத்தம், 5,000 கம்ப்யூட்ர்கள், மற்றும் 67,000 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டுகள் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சென்டரின் மொத்த மெமரி, 536 terabytes ஆக இருக்கும்! புதிய சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு செக்கனுக்கு, 2,000 ட்ரில்லியன் கல்குலேஷன்களை போடக் கூடியதாக இருக்கும் எனவும் BP கூறியுள்ளது. BP நிறுவனம், லண்டனை பிரதான தலைமையகமாக கொண்ட பிரிட்டனின் மல்ட்டி நேஷனல் நிறுவனம். 2011-ம் ஆண்டு கணிப்பின்படி, உலகின் 4-வது பெரிய நிறுவனம், மற்றும், உலகின் 3-வது பெரிய எண்ணை நிறுவனம்!
இவர்கள் அறிவித்துள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்புக்கு சரியாக எவ்வளவு செலவு பிடிக்கும் என்ற தகவலை வெளியிட மறுத்துள்ள BP, 100 மில்லியன் டாலர் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே அறிவித்துள்ளது. இந்த தொகைக்குள் கம்ப்யூட்டரை தயாரித்து விடுவார்களா, அல்லது, மேலும் பட்ஜெட் அதிகரிக்கப்பட வேண்டியிருக்குமா என்பது தெரியவில்லை.
BP நிறுவனம் தற்போது, Dell மற்றும், HP (Hewlett-Packard) கம்ப்யூட்டர்களையே பயன்படுத்துகிறது. அவர்களது தற்போதைய computing centre, ‘பெரிய காங்க்ரீட் பெட்டி, மற்றொரு பெட்டிக்குள்’ (“big concrete box within a box”) என்று வர்ணிக்கப்படும், 3 மாடி பில்டிங். புயல் மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படாத வகையில கட்டப்பட்டுள்ள இந்த பில்டிங்குக்கு உள்ளே, ஆறு 50 டன் ஏர்கண்டிஷன்கள் இயங்குகின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக