ஞாயிறு, 25 நவம்பர், 2012

கோவையில் Volvo show room இந்தியாவின் மிகப் பெரிய



India`s Biggest Volvo Showroom in India The Biggest Showroom at VOLVO has opened now in Coimbatore

இந்தியாவின் மிகப்பெரிய வல்வோ கார் ஷோரூம் கோவை நகரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
 india biggest volvo showroom coimbatore உலகின் புகழ்பெற்ற வல்வோ நிறுவனத்துக்கு ஏற்கெனவே இந்தியாவில் ஏழு ஷோரூம்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மிகப் பெரியது இந்த கோவை சின்னிப்பாளையத்தில் ஷோரூம்தான்.
ரவி ஐபிஎஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். வல்வோ நிறுவன சிஎப்ஓ சினேகா ஓபராய் குத்து விளக்கேற்றினார்.நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் தாமஸ் எர்ன்பர்க் கூறுகையில், "ஸ்வீடனில் தயாராகும் வல்வோ கார்கள், உலகின் அத்தனை பகுதிகளிலும் பாதுகாப்பான கார்கள் என பெயர் பெற்றுள்ளன என்றார்.
1920-ம் ஆண்டிலிருந்து சந்தையில் உள்ள வல்வோ கார்கள், இந்தியாவுக்கு 2008-ம் ஆண்டு அறிமுகமாயின.

S60, S80, XC60, XC90 என நான்கு மாடல்களில் இந்தக் கார்கள் கிடைக்கின்றன.
மிக உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்தக் கார்களில் செய்யப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான விபத்துக்கள் 30 கிமீக்கு குறைந்த வேகத்தில் செல்லும்போதுதான் ஏற்படுகின்றனவாம். அதாவது நகரப் பகுதிகளில்.
இதைத் தடுக்க, வல்வோ கார்களில் 50 கிமீக்கு குறைந்த வேகத்தில் செல்லும்போது, ஓட்டுநர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டால் கூட, தானாகவே வேகக் குறைப்பு செய்யும் வகையில் பிரேக் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பை விட 5 மடங்கு உறுதியான பேரன் ஸ்டீல் என்ற உலோகம் வல்வோவின் XC 90 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரூ 33 லட்சத்திலிருந்து இந்த கார்களின் விலை தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக