செவ்வாய், 27 நவம்பர், 2012

தயாநிதிமாறன் வீட்டுக்கு இணைப்பு- Traffic Ramasamy புதிய மனு

;பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.400 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. மறு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சென்னை சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக டிராபிக் ராமசாமி செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை போட்கிளப்பில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் 323 தொலைபேசி இணைப்புகளை பெற்றுள்ளார். இந்த இணைப்புகளை சன் டிவி அலுவலகத்திற்கு முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.>இதற்காக தயாநிதிமாறன் வீட்டில் சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைக்கபப்ட்டுள்ளது. இந்த முறைகேடு மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பி.எஸ்.என்.எல். பதிவாளர்கள் சங்கம் கடந்த 2011-ல் ஆர்பாட்டம் செய்தனர்ஜவுளித் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் பதவி விலக வேண்டுமென பி.எஸ்.என்.எல்.தொழிலாளர்கள் வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்தது.ஆனால் அதன் மீது சி.பி.ஐ. எந்த விதமான சட்டரீதியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து மறுவிசாரணை செய்யக்கேட்டு, சிபிஐ இயக்குனர், தொலை தொடர்பு செயலாளர் ஆகியோருக்கு சென்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மனு கொடுத்தேன் அந்த மனுவை பரிசீலிக்கும்படி கோர்ட் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்கள் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக