திங்கள், 26 நவம்பர், 2012

TEA குடிக்கலாமா? வேண்டாமா? பரதேசி பிரஸ் மீட்

இளையராஜாவை மிஸ் பண்ணிட்டீங்களே ஏன் பாலா? - பரதேசி பிரஸ் மீட்டில் கேள்வி ;     
புதிய காம்பினேஷனில் படம் பண்ண வேண்டும் என பத்திரிகைகள் எழுதியதால்தான் பரதேசியில் டீமை மாற்றினேன் என பதிலளித்துள்ளார் இயக்குநர் பாலா.
பாலா இயக்கும் புதிய படம் ‘பரதேசி'யின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது.
இதைத்தொடர்ந்து 'பரதேசி' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பாலா அளித்த பதில்கள்:


‘பரதேசி' என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கக் காரணம் என்ன?
இந்த தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் கூறமுடியாது. சுதேசிக்கு எதிர்ப்பதம் பரதேசி. ஊர் விட்டு ஊர் போகும் ஒரு பரதேசியின் கதை. அதைத்தான் தலைப்பாக வைத்திருக்கிறோம்.
உங்களுடைய படங்களில் நடித்த நடிகர்களில் யார் சிறந்த நடிகர்?
நான்தான் சிறந்த நடிகன்.
உங்களுடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் பெரிய அளவில் ஹிட்டாகி விடுகிறார்கள். ஆனால், ஹீரோயின்கள் அந்த அளவுக்கு பெரிய அளவில் பேசப்படுவதில்லை. அது ஏன்?
அப்படி சொல்லமுடியாது. பிதாமகனில் நடித்த சங்கீதா, அந்த படத்திற்கு பெரிய நடிகையாகிவிட்டார். லைலாவும் பெரிய நடிகையாக வலம் வந்தார். அதுபோல், இந்த படத்தில் நடித்துள்ள இரு ஹீரோயின்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்புள்ளது.
‘பரதேசி' உண்மைக் கதையா?
இது முழுக்க முழுக்க உண்மை கதை கிடையாது. உண்மைக் கதையில் என்னுடைய கற்பனையையும் கலந்து பண்ணியிருக்கிறோம்.
இந்த படத்தில் அதர்வாவை நடிக்க வைக்கவேண்டும் என்று எப்படி தோன்றியது?
இந்த கதைக்கு அவர் தேவைப்பட்டார் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, அது என் கடைமையும்கூட.
இளையராஜாவை விட்டுவிட்டு, ஜிவி பிரகாஷை தேர்வு செய்தது ஏன்?
வழக்கமாக நான் இளையராஜா, விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் என்று திரும்பத் திரும்ப ஒரே டீமை வச்சி படம் பண்றதாவும், புது ஆட்களோட ஏன் வேலை பார்க்கவில்லை என்றும் நீங்கள்தான் (பத்திரிகைகள்) எழுதினீர்கள். இப்போ ஏன் இளையராஜாவோட சேரலைன்னு கேட்கறீங்க..
‘பரதேசி' படத்தில் இரு நாயகிகளும் ரொம்பவும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் படத்தில் கறுப்பாக, அசிங்கமாக காட்டியிருக்கிறீர்கள். ஏன் கருப்பான நடிகைகளை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது?
அப்படியெல்லாம் கிடையாது. கருப்பான பெண்களையும் நடிக்க வைத்திருக்கிறேன். இந்த படத்தில் ரித்திகா என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனக்கு நார்த் இண்டியன் நடிகை, சவுத் இண்டியன் நடிகை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மொத்தத்தில் இண்டியன் நடிகை என்றுதான் பார்க்கிறேன்.
‘பரதேசி' படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
இன்று டீ குடிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. ஆனால், இப்படத்தை பார்த்தபிறகு அந்த டீயை குடிக்கும் முன்பு அதை குடிக்கலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். Posted by:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக