வியாழன், 1 நவம்பர், 2012

Ambaniகாகவே அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர்? கெஜ்ரிவால் கேள்வி

நாட்டை வழிநடத்துவது பிரதமரா? முகேஷ் அம்பானியா?: கெஜ்ரிவால் கேள்வி




டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்காகவே நாட்டின் மத்திய அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர் என்றும் நாட்டை வழிநடத்துவது பிரதமர் அல்ல... முகேஷ் அம்பானி தான் என்றும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலியத் துறை அமைச்சகப் பொறுப்பு பறிக்கப்பட்டு அவர் முக்கியத்துவமில்லாத அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டார். இது கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
கிருஷ்ணா- கோதாவரி படுகையில் அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவுக்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பதாலே ஜெய்பால் ரெட்டியின் அமைச்சகப் பொறுப்பு மாற்றப்பட்டது என்று அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர்.
Posted by:
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கப் போவதாகவும் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை முறைகேடு, சோனியா மருமகன் வத்ராவின் நில முறைகே, பாஜக தலைவர் கட்காரியின் ஊழல்களை அம்பலப்படுத்தியது போல் முக்கிய ஊழல் விவகாரம் ஒன்றை வெளியிடப் போவதாகக் கூறியிருந்தார்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானிதான் நாட்டை வழிநடத்துகிறவராக இருப்பதாகக் கூறி அறிக்கை ஒன்றி வெளியிட்டார் கெஜ்ரிவால். அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்:
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு கண்டுபிடிக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் ஈடுபட்டுள்ளன. இதனால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மணிசங்கர் மாற்றம்
2006-ம் ஆண்டு மணிசங்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டு முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டதன் பின்னணியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே இருக்கிறது. முரளி தியோரா பொறுப்பு வகித்த காலத்தில் அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.39 பில்லியன் டாலரிருந்து 8.9 பில்லியனாக இருந்தது. அதேபோல் கோதாவரி- கிருஷ்ணா படுகையில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் எடுக்கும் வரிவாயுவுக்கான விலையும் ஒரு யூனிட்டுக்கு 2.34 டாலரிருந்து 4.2 டாலராக அப்போது உயர்த்தப்பட்டிருந்தது.
ஜெய்பால் ரெட்டி மாற்றம்
தற்போது ஜெய்பால் ரெட்டியை பெட்ரோலிய அமைச்சகப் பொறுப்பில் இருந்து மாற்றியிருப்பதற்கும் ரிலையன்ஸ் நிறுவனமே காரணம். ஏனெனில் அந்த நிறுவனம் அரசுக்கு கொடுக்கும் எரிவாயுவின் விலையை ஒரு யூனிட்டுக்கு 4.2 டாலரிருந்து 14.2 டாலராக உயர்த்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அப்படி அரசு விலையை உயர்த்திக் கொடுக்காவிட்டால் எரிவாயு உற்பத்தியை நிறுத்தப் போவதாக பிளாக்மெயில் செய்து வருகிறது ரிலையன்ஸ்
கடுமையான விலை உயர்வு ஆபத்து
நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு ஒப்பந்தங்களை மத்திய அரசுடன் மேற்கொண்டு பெரும் ஆதாயத்தை அந்நிறுவனம் அடைந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கோருவது போல் அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டால் மின் கட்டணம் மற்றும் விவசாய இடுபொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ43 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என்பதுதான் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்!  http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக