செவ்வாய், 6 நவம்பர், 2012

DGP துக்கையாண்டி மனைவி காவல் நீடிப்பு! சாப்பிட மறுத்ததால், நோ விசாரணை!!

 பல ஆண்டுகளுக்கு முன்னாள் ஜெயலலிதா (எங்கள் இதய தெய்வம் அம்மா அவர்கள்) கைது செய்யப்பட்டபோது கடமையில் இருந்த டிஜிபி துக்கையண்டியை வஞ்சம் தீர்க்க இப்படியெல்லாம் செய்கிறார் ம்ம் பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் 
Viruvirupu
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை முடிந்த நிலையில், கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி மனைவி சுப்புலட்சுமிக்கு, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3-ம் தேதி முதல், சுப்புலட்சுமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்று போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் சுப்புலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும், 19-ம் தேதி வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 3-ம் தேதி அவரை போலீஸ் தமது காவலில் எடுத்து விசாரணை செய்ய முயன்றபோது, விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவே தெரியவருகிறது. விசாரிக்கப்பட்டபோது, அவர் உணவு சாப்பிட மறுத்தார். தண்ணீர் கூட குடிக்காததால் விசாரணையை செய்ய முடியவில்லை.
“தண்ணீராவது பருகுங்கள்” என பெண் போலீசார் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், பலன் இல்லாமல் போனதால், அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கும் அவர் முரண்டு பிடித்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் முழித்தனர்.
தொடர்ந்து உணவு சாப்பிட மறுத்து வந்ததால், விசாரணையை தொடங்க முடியாமல் போலீஸ் திணறியது. அதற்குள் விசாரணைக்காக கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்து போனது. மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, போலீசார், கோர்ட்டில் அனுமதி வாங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக