சனி, 17 நவம்பர், 2012

துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?

thuppakki issue here is the inside story துப்பாக்கி படத்தில் சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!), தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட் கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வெளியான மூன்று மணி நேரத்துக்குள், முஸ்லிம் அமைப்புகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. http://tamil.oneindia.in/
அடுத்த நாளே, விஜய், ஏஆர் முருகதாஸ், தாணு வீடுகளுக்கு முன்பாக பெரிய ஆர்ப்பாட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்தன. அதில் 60 பேர் கைதாகிய நிலையில், அதற்கடுத்த நாள் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். அத்தோடு, படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தி, மக்களை படம் பார்க்க விடாமல் செய்யப் போவதாக செய்தி பரவியது.
இதில் தியேட்டர்காரர்களுக்கு கிலியடித்துவிட்டது. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் முன்பு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, நடந்த தாக்குதல் போல ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தவர்கள், தயாரிப்பாளருக்கு போன் போட்டு, ஏதாவது பண்ணுங்கள்.. இல்லாவிட்டால் படத்தை தியேட்டரை விட்டு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றதும் தான்... இந்த பகிரங்க மன்னிப்பு படலத்தை அரங்கேற்றினார்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக