ஞாயிறு, 4 நவம்பர், 2012

சின்மயி செக்ஸ் அர்ச்சனை: ‘மோடம்’ எடுத்து ‘மேடம்’ பற்றி துப்பறிந்த போலீஸ்!

Viruvirupu
அவினாசி போலீஸ் ஹைடெக் ஆகிறது!
பாடகி சின்மயி தன்மீது செக்ஸ் அர்ச்சனை நடைபெறுவதாக செய்த புகாரையடுத்து போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகள் இன்னமும் முடிவடையவில்லை. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் வீட்டில் அவினாசி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு எடுத்துச் சென்ற பொருட்களில் இருந்து புதிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் போலீசார், அவிநாசியைச் சேர்ந்த ராஜன் என்கிற ராதாமணாளனை கைது செய்தனர். இவரது வீட்டில்தான், போலீஸார் சோதனை நடத்தினர். கடந்த 1-ம் தேதி நடத்தப்பட்ட இந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்த கணணி தொடர்பான அனைத்தையும் வாரிச் சென்றனர் அவினாசி போலீஸார்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து, லேப்டாப், சி.டி.க்கள், இணைய தள இணைப்புக்கான மோடம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர் காவல்துறையினர். இவற்றை வைத்து பெரிதாக என்ன கண்டுபிடிக்க முடியும் என்று தெரியவில்லை.
போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, தாம் எடுத்துச் சென்ற பொருட்களில் இருந்து புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஒப்புக்கொண்டனர். பின்னே, மோடத்தில் மேடம் பற்றி என்ன தகவல் கிடைக்கும்?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் பணியில் இருக்கும் ராஜன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட காரணத்தால், பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக