திங்கள், 12 நவம்பர், 2012

ஸ்டாலின் மீண்டும் உடலெடுத்துவிட்டார். ஆனால் அவர் ரஷ்யாவில் பிறக்கவில்லை.

www.ananthageetham.blogspot.com/      மிகவும் சுவாரசியமான ஆவி உலக சமாச்சாரங்கள் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உலக புகழ் பெற்ற பலரும் ஆவி உலகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று அறிவதில் யாருக்குதான் சுவாரசியம் இருக்காது. நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம் 
ஆபிரகாம் லிங்கனைப் (Abraham Lincoln) பற்றிப் பார்ப்போம். அவர் ஒரு பிரகாசமான ஆத்மா. எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மென்மையான ஆத்மா. இங்கே நீண்ட காலம் தங்கியிருந்தபின் அவர் மீண்டும் உடலெடுத்துள்ளார். இப்போ நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) இல் வாழ்கிறார். அங்கே அவர் தெற்கத்திய இனப்பிரச்சனையின் எல்லா விதமான முகங்களையும் எல்லா விதமான வெளிப்பாடுகளுடன் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போ வயது வந்தவராகி விட்டார். அவர் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க பல்கலைக்கழகங்களுடனும், அறக்கட்டளை நிறுவனங்களுடனும் சேர்ந்து வேலை செய்கிறார்.
ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington)? அவர் சிறிதுகாலம் கண்ணில் படமாட்டார். ஏனெனில் சமீபத்தில் வியட்நாமில் ஒரு போராளியாக வாழ்ந்து முடித்தபின் இப்போ ஓய்வெடுக்கிறார். அவரது இறப்பானது அவ்வளவு அதிர்ச்சி நிறைந்ததாகையால், சிறிது காலத்துக்கு அவர் நித்திரை கொள்வார். ஒரேயொரு விஷயத்தைத் தவிர அவரது கடைசிப் பிறப்பின் அடையாளத்தை நாம் இதற்கு மேல் சொல்வதற்கு விரும்பவில்லை. அதாவது அவர் ஒரு படைப்பிரிவைத் தைரியத்துடன், எதிரிகளின் படைவரிசைகளின் பின்னே வழிநடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்டுவிட்டார்.
"சார்லஸ் த கால் (Charles de Gaulle) ஐரோப்பாவினதும் மத்தியகிழக்கு நாடுகளினதும் வளர்ச்சிகளை ஆவலுடன் கவனிக்கிறார். அங்கே பழக்கப்பட்டது போல இங்கே வந்ததும் வராததுமாக அவர் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். ல பெல் பிரான்ஸ் (La Belle France) என அவர் அழைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு ஏதாவது துயர் வருமெனில் எப்பொழுதும் தீக்குதிரை போல நிற்பார்.  
இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத் மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள் வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும் ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம் உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomery க்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது
 www.ananthageetham.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக