சனி, 10 நவம்பர், 2012

மங்காத்தா கெட்-அப்பில் பிரியாணி கார்த்தி


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா வெற்றியடைந்ததைத் தொடந்து, அவர் அடுத்ததாக இயக்கும் படம் ’பிரியாணி’. ஹீரோவாக கார்த்தி நடிப்பது உறுதியாகிவிட்டது. மங்காத்தா படத்தில் அஜித்தை புது கெட்-அப்பில் காட்டி அனைத்து  அஜித் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற வெங்கட் பிரபு கார்த்தியையும் ரசிகர்கள் இதுவரையில் பார்க்காத புது கெட்-அப்பில் காட்ட முயற்சி செய்துவருகிறாராம்.கார்த்தியை வைத்து பல வித மேக்-அப் செய்து பார்த்துவிட்டு பின்பு கடைசியாக ஒரு கெட்-அப்பை நீண்ட நேரத்திற்கு பிறகு தேர்வு செய்தாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. கார்த்தியின் இந்த புது அவதாரம் கார்த்திக்கு இருக்கும் பெண் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டாராம் வெங்கட் பிரபு. 
சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் ஜோடியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி தான் கார்த்திக்கு இந்த படத்தில் ஜோடியாம். வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா வெங்கட் பிரபுவின் படத்திற்கு இசையமைக்கிறார்.கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் என எதிபார்க்கப்பட்ட அலெக்ஸ்பாண்டியன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக