செவ்வாய், 6 நவம்பர், 2012

என்னதான் பேசுவதோ? காதல் இல்லாத கதை

சென்னை-: பாலாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆச்சார்யா ரவி. இவர் ‘என்னதான் பேசுவதோ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பீகாரிலிருந்து தப்பி வரும் ஒரு பெண்ணிடம் 5 மாணவர்கள் நட்பாக பழகுகின்றனர். திடீரென்று ஒரு கும்பல் அவளை இழுத்துச் செல்கிறது. அவளது பின்னணி தெரிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைக்கிறார்கள். அந்த பெண்ணை மாணவர்கள் காப்பாற்றுகிறார்களா என்பது கதை. விஜய் ராம், தாஸ், ரோஷன், சின்னசாமி, மாஸ்டர் விக்னேஷ் ஹீரோக்கள். தக்ஷா ஹீரோயின். இப்படத்தில் காதல் கிடையாது. இசை டி.இமான். பீகாரில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. மேலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டையில் ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் நானே ஏற்றிருப்பதால் சுமை கூடுதலாகி இருக்கிறது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக