வியாழன், 8 நவம்பர், 2012

காற்றாலை உற்பத்தி பாதிப்பு : தமிழகத்தில் "மின் வெட்டு' நேரம் அதிகரிக்கும் அபாயம்

நாள்தோறும் நிலவும், 16 மணி நேர மின்வெட்டால், மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர். தற்போது, 6,500 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி உள்ளதால், வரும் நாட்களில் மின்வெட்டு நேரம், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில், சென்னையில் இரண்டு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில், 16 முதல், 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக தொடரும், மின்வெட்டு பிரச்னையால், மக்கள் நிம்மதி இழந்து விட்டனர்; சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவிக்கின்றனர்.  http://www.dinamalar.com/
  தமிழக மக்கள் மின்சாரத்தைத் தொலைத்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டதே ? வானிலை அறிக்கை கொடுக்குற மாதிரி தினம் உற்பத்தி எவ்வளவு ஆகுது எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமல் படுத்த போகிறார்கள் என்று சொன்னால் மக்கள் அதற்கு முன்னேற்பாடாக பந்தம் கிந்தம் கொளுத்தி வைத்து கொள்வார்கள்.

"வரும், 2013 இறுதிக்குள், மின்வெட்டே இல்லாத தமிழகம் உருவாகும்' என, முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மொத்தம், 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை என்ற நிலையில், வெறும், 6,500 மெகாவாட் மட்டுமே உற்பத்திகிடைக்கிறது; அதில், சென்னைக்கு பாதி போய் விடுகிறது."தீபாவளி' காரணமாக, வணிக நிறுவனங்களில் மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாளில், மின் வெட்டு நேரம், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.வல்லூரில் இருந்து, 350 மெகாவாட்டும், மேட்டூரில் இருந்து, 600 மெகாவாட்டும் கிடைத்தால் மட்டுமே, ஓரளவு நிலையை சமாளிக்கலாம். இருண்ட தீபாவளி



தொழிலதிபர்கள் கூறியதாவது:கடந்த நான்கு மாதத்தில், வெள்ளி தொழில், ஜவுளி ஏற்றுமதி , விசைத்தறி என, எல்லாமே, மின்வெட்டால் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டன. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு நாள் கூலியை கூட முழுமையாக பெற முடியாமல், தொழிலாளர்கள் தவிக்கின்றனர். "ஆர்டர்' வாங்கியவர்களிடம், குறிப்பிட்ட நாளில் உற்பத்தி செய்தவற்றை கொடுக்க முடியாமல் திணறுகிறோம்.
அரசு, காரணம் கூறுவதை விட்டு விட்டு, மாற்று வழி என்ன என்பதை கண்டறிய வேண்டும். இனிமேலும் மின்வெட்டு பிரச்னை தொடராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, தொழிலாளர்களுக்கு
மட்டுமின்றி, எங்களுக்கும், "இருண்ட தீபாவளி' தான்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், காற்றாலை மின் உற்பத்தி முற்றிலுமாக இல்லாமல் போய் விட்டது. வெளிமாநிலத்தில் இருந்து, 500 மெகாவாட் மின்சாரம் வாங்க, அரசு, "டெண்டர்' கோரியுள்ளது. அந்த, 500 மெகாவாட் கிடைத்தால், ஒரு மணி நேர மின்வெட்டு குறைக்கப்படும்.தற்போது காலையில், நான்கு மணி நேரம், இரவில், நான்கு மணி நேரம் மின் சப்ளை கொடுக்கிறோம். வல்லூரில், 350மெகாவாட், மேட்டூரில், 600 மெகாவாட் உற்பத்தி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.தீபாவளி பண்டிகைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோம் என, தெரியவில்லை. http://www.dinamalar.com/
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஒரு மணி நேரத்துக்கு, ஒரு முறை மின்வெட்டு என்பதை மாற்றி, தொடர்ந்து மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, காலையில், நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக மின்சப்ளை வழங்குவது குறித்து, ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக