சனி, 10 நவம்பர், 2012

நாயகனின் அன்பிலிருந்து வெளிவரமுடியாமல் இருக்கிறார்

இப்போதும் அவர் காதல் இளவரசன்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். அபாரத் திறமையின் வெளிப்பாடு, ஓயாத உழைப்பு என விஸ்வரூபமெடுத்தாலும், இளமை ஊஞ்சலாடும் நாயகனாகவே இருக்கிறாராம். அவருடைய சமீபத்திய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஓர் இளம் பெண்ணை, நாயகனுக்கு நெருக்கமானவர்களே ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
நாயகனின் அலுவலகத்திலும் அந்தப் பெண்ணை அடிக்கடி காணமுடிகிறதாம். இது அந்த முன்னாள் நடிகை உள்ளிட்ட நாயகனின் நெருக்கமானவர்களுக்கு ஃபீலிங்கை  ஏற்படுத்தியுள்ளதாம். அப்பா- மகள் வயதுள்ள இருவருக்குமிடையிலான அன்பு, என்பது, அதையும் தாண்டி புனிதமானதாக இருப்பதால், நாயகன் பல பிஸியான நேரங்களிலும் அந்த பெண் ணுடன்  ஃபோனில் மூழ்கிவிடுகிறாராம். பல நேரங்கள் மெஸேஜிலேயே பொழுதை கழிகிறதாம். நாயகனின் காரிலும் அந்தப் பெண்ணை அடிக்கடி பார்க்க முடிகிறது. இது அந்தப்  பெண்ணின் வீட்டிலும் சர்ச்சையை கிளப்பி யிருக்கிறது. அந்தஸ்தான குடும்பம், அந்தஸ்தான பொறுப்பு வகிக்கும் அந்த பெண்ணும் நாயகனின் அன்பிலிருந்து வெளிவரமுடியாமல் இருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். இந்த உறவு சென்ஸார் செய்யப்படுமா என்பதே பலரது கேள்வியுமாகும்! http://www.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக