ஞாயிறு, 11 நவம்பர், 2012

பச்சையப்பன் கல்லூரி, திரும்பவும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது

200 வருடங்களுக்கு மேலாக கல்விச் சேவையை அனைவருக்கும் வழங்கி வரும் பச்சையப்பன் கல்லூரி, திரும்பவும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் துபாஷாக பணிபுரிந்த, குழந்தைகளே இல்லாத பச்சையப்பன், பிராமணர் களின் செயல்களால் வெறுத்துப்போய், குழந்தை களுக்கு கல்வி புகட்ட வேண்டி தனது சொத்துக்களை விற்றுவிட்டு பச்சையப்பன் அறக்கட்டளை  ஆரம் பித்தார். அதன் முக்கிய காரணமே அடித்தட்டு மக்களுக்கு உதவத்தான்.
அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு நடத்து வரும் வருணாசிரமத்தைப் பார்த்து வருத்தப்பட்டு பிராமணர்களை விரட்டி விட்டு, சமூகத்திலிருந்த முதலியார், பிள்ளைமார், நாயக்கர் போன்ற முக்கியமானவர்களைக் கொண்டு முறைப் படுத்தினார்.

அப்பொழுது 117 மாணவர்களுடன் ஆரம்பித்த பச்சைப்பன் அறக்கட்டளையை, இன்று 5 கல்லூரிகள் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், 1 பாலி டெக்னிக் மூலம் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுத்துள்ளது. என்னே பச்சையப்பன் கல்வித் தொண்டு! இன்று அதன் சொத்து மதிப்பு ரூ.6500 கோடிக்கும் அதிகமாகும்.
அதன் பிறகுதான் பல சமூகங்களைக் கொண்ட வசதிபடைத்தவர்கள் பச்சையப்பன் அறக்கட்ட ளைக்கு தாராளமாக தங்களது சொத்துகளை கொடுத்து உதவினார்கள். அப்படிக் கொடுத்தவர் களின் நிபந்தனைகளே பச்சையப்பன் கட்டளையில் பிராமணர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான். இதை நக்கீரன் நவம்பர் (03-06) 2012 - பக்கம் 40இல் உறுதிப்படுத்துகிறது.
மேலும், 149 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே! என்று டைம்ஸ் ஆப் இந்தியா படப்பிடிப்பு. மேலும் விடுதலையில் சென்னை அய்.அய்.டி.யா? - அக்கிரகாரமா என்றும் 14.9.2012இல் கேட்டுள்ளது.
அய்.அய்.டி சென்னை, மத்திய அரசின் எய்ம்ஸ் (டெல்லி) போன்ற கல்வி நிலையங்களில் உயர் சாதியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பச்சையப்பன் அறக்கட்டளையும் சேர வேண்டுமா? என்பதே நம் கவலை.
இன்று பச்சையப்பன் அறக்கட்டளையில் 165 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றில் உயர் சாதியினர் நுழைந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக் கனவு நொருங்கி விடும். சாதி பாகுபாடுகள் இல்லாமல் அனைவரிடமும், கையேந்தி பணம் வசூலித்து, கீழ் ஜாதி மக்களின் கை வண்ணத்தில் உருவாகும் கோயில், கட்டி முடித்ததும், கீழ் ஜாதி கோயிலுக்குள் போக முடியாது. அதன் பிறகு பணம் கொடுக்காமல், உழைக்காமல் கோயிலை கையகப்படுத்தி அனுபவித்து அதிகாரம் செய்யும் மேல் ஜாதி மக்களை என்ன செய்வது?
திரு. சேஷன் தேர்தல் பணியிலிருந்த பொழுது, தினமும் அவர்களின் அடாவடி அதிரடிகளை  யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பிறகு வந்த தேர்தல் அதிகாரிகளின் அடக்கமும் பணிவும், இவர்களுக்கு முன் இருந்த தேர்தல் அதிகாரி திரு. சேஷன் அவர்களுடன் ஒப்பிட்டு, வெயிலின் அருமை நிழலில் தெரிவதாக எழுதினார்கள்.
மேலும் பெரியவர் சங்கராச்சாரியார் இறந்த பொழுது ஆளுயர ஒரு தடியை எடுத்துக் கொண்டு கூட்டத்தை அடாவடியாகக் கட்டுப்படுத்தியது தேவையற்ற செயல். எவ்வளவோ காவல் துறையினர் அங்கிருந்தும் இவர் போட்ட ஆட்டம் அவரது பதவிக்கு அழகல்ல. நல்ல வேளை இவர் அய்.ஏ.எஸ் அதிகாரி மட்டும்தான். ஒரு வேளை அய்.பி.எஸ் படித்திருந்தால் ஆளுயர ஒரு தடிக்குப் பதிலாக ஒரு துப்பாக்கியை வைத்து ஆட்டம் போட்டு இருப்பார்.
பச்சையப்பன் அறக்கட்டளையில் பணியாற்ற தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எதற்கு காவல்துறை பாதுகாப்பு? பச்சையப்பன் அறக்கட்டளையில் எப்பொழுதும் இருக்கும் காவல்துறையே போதும். இவரைப் போல் மற்ற அதிகாரிகளும் கேட்டால் என்னவாகும்? ஆரம்பத்திலேயே தனக்கு வரும் ஆபத்தை புரிந்து கொண்ட இவரை மாற்றி வேறொருவரை நியமிக்க வேண்டும்.
எனவே, சேஷனை மாற்றி விட்டு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வேறு பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். மேலும் பச்சையப்பன் அறக்கட் டளையில் உள்ள உயில்களின் கட்டளைகளை மனதில் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்களை நியமிப்பதுதான் சட்டத்தின் கடமையும், நியாயமும் ஆகும்.
இதனைப் புரிந்து செயல்படுத்தாவிட்டால் இன்று அல்லது நாளை சட்டத்தின் முன் சம்பந்தப் பட்டவர்கள் தலைகுனிய நேரிடும். வருமுன் காப்பதே சிறந்தது. சாதி பாகுபாடுகள் உடனடியாக ஒழிக்கப்பட்ட நிலையில், பிராமணர்கள் கபே மீண்டும் வந்தது போல், பச்சைப்பன் அறக்கட்டளையும் மீண்டும் அவர்கள் கையில் போகாமல் பார்ப்பது தமிழகத்திற்கு நல்லது.
எப்பொழுது ஒருவரை நாம் பிராமின் என்று சொன்னால் நாம் உடனே சூத்திரர்கள் ஆகிவிடு கிறோம் என்று ஒரு பெரியவர் கூறினார். ஒருவேளை, பச்சையப்பன் கல்லூரியிலிருந்து ஆங்கிலேயர்கள் இவர்களை விரட்டி விடாமல் இருந்திருந்தால், தமிழகம் அண்ணா போன்ற சிறந்த அறிஞர்களை இழந்திருப்போம்.
வாழ்க பச்சையப்பன்! வளர்க பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்விப் பணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக