சனி, 3 நவம்பர், 2012

திக்விஜய்சிங்? நரேந்திர மோடிக்கு மனைவி (யசோதா) இருக்காங்க தெரியுமா?

 Digvijaya Singh Asks Narendra Modi நரேந்திர மோடிக்கு மனைவி இருக்காங்க தெரியுமா?: திக்விஜய்சிங் பரபரப்புப் பேச்சு Digvijay Singh said: "Why is Modi is silent about his wife's name? If you can visit You Tube and search Narendra Modi's wife, you will find the name Yashoda Ben as his wife."



சிம்லா: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியை கிண்டலடித்து சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கும் நரேந்திர மோடியின் பேச்சு இப்பொழுது அவருக்கே பூமராங்காக திரும்பியிருக்கிறது.
மோடியின் கிண்டல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு "ரூ. 50 கோடி காதலி" இருக்கிறார். இவ்வளவு வேல்யூவான காதலி உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஐ.பி.எல். விவகாரத்தில் சசிதரூரின் காதலியாக இருந்த சுனந்தாவை மனதில் வைத்துக் கொண்டுதான் மோடி இப்படிப் பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சசி தரூரோ, என் மனைவி விலை மதிப்பற்றவர் எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது மோடியை இதே மனைவி விவகாரத்தை வைத்து மடக்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்.

சிம்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திக்விஜய்சிங், பொதுமக்களே! நீங்கள் இணைய தளத்தில் யூ டியூப் பகுதிக்கு சென்று நரேந்திர மோடியின் மனைவி என்று டைப் செய்தால் யசோதா பெண் என்ற பெயர் வரும்.
நரேந்திர மோடியுடன் தமக்கு 1968- ல் திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால், மோடி இதற்கு பதில் அளிக்க மறுக்கிறார்.
தேர்தல் ஆணையத்திடம் மோடி அளித்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், திருமணம் ஆனவரா? என்ற பகுதியில் எதுவும் குறிப்பிடாமல், வெற்றிடமாக விட்டது ஏன்? மோடி, உங்கள் மனைவி எங்கே இருக்கிறார்? ஏன் அவரை மறைத்து வைத்துள்ளீர்கள். உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடிக்கு மனைவி இருப்பதாக திக்விஜய் சிங் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக