திங்கள், 12 நவம்பர், 2012

சிறுதாவூர் பங்களாவில் தீபாவளி கொண்டாடும் ஜெயலலிதா

அடுத்த ஷாட் ரெடியானதும் அம்மா போயஸ் தோட்டத்துக்கு  வருவாங்க அவசரமா எதினாச்சும் தேவையின்னா ப்ரொடக்ஷன் பாய்கிட்ட ( அட நம்ப பன்னீர்ங்க)  சொல்லுங்க 

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் அவர் அங்கு சென்று ஓய்வெடுத்தார். அப்போது அவர் அங்கிருந்தே அரசு பணிகளை செய்து வந்தார். அங்கு தங்கியிருந்த நேரத்தில் கோட்டை மற்றும் சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்து சென்றார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் சிறிதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளார்.

தீபாவளி வரை அவர் அங்கு தான் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது அவர் அங்கு தான் தீபாவளி கொண்டாடுகிறார். அரசு அலுவல்கள் காரணமாக எப்போதும் பிஸியாக இருக்கும் அவர் சற்று ரிலாக்ஸ் செய்ய அங்கு சென்றுள்ளார். அவர் சிறுதாவூர் பங்களாவுக்கு செல்லும்போதெல்லாம் அவரது தோழி சசிகலா உடன் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக