வெள்ளி, 9 நவம்பர், 2012

திருநீறு அணிந்து கோவிலில் வணக்கம் செய்த கனடியப் பிரதமர்.

பெங்களூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் அங்குள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பெங்களூரில் கனடாவிற்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார்.
 கோயில் பிரகாரத்திற்குள் சென்ற ஹாப்பரிற்கு சோமேஸ்வர ஆலய பிரதமக் குருக்கள் சால்வை போர்த்தியும், மலர்மாலையணிந்தும் வரவேற்றார். அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்ட ஹாப்பர், கோவில் உட்பிரகாரத்தைச் பிரதம குருக்களுடன் இணைந்து சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் பெங்களூரில் துணைத்தூதரகம் ஒன்றைத் திறந்து வைத்தார். தென்னிந்தியாவிலுள்ளவர்கள் கனடா வருவதற்கும், கனடிய அரசைத் தொடர்பு கொள்ளவதற்கும் இந்தத் தூதரகம் உதவுமென அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஆந்திராவின் ஹைதராபாத்தில் 2006ம் ஆண்டு கனடா தனது உத்தியோகபூர்வ தொடர்புகளைப் பேணுவதற்கான நிலையமொன்றைத் திறந்து வைத்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இந்தத் துணைத் தூதரகம் திறந்து வைக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் துணைத்தூதரங்கள் சென்னையிலேயே இருக்கின்ற போதும் சென்னை தற்போது பல முன்னெடுப்புக்களில் தவிர்க்கப்பட்டு வருவது அங்கு அடிக்கடி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றனவற்றின் அச்சுறுத்தலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

 canadamirror.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக