ஞாயிறு, 25 நவம்பர், 2012

கர்ணன் வரிசையில் வசந்தமாளிகை ரீரிலீஸ்

1972-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், பாலாஜி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ‘வசந்த மாளிகை’. இயக்குனர் பிரகாஷ் ராவ் 1971-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘பிரேம் நகர்’ என்ற பெயரில் எடுத்து வெற்றியடைந்த படத்தின் ரீமேக் தான் வசந்த மாளிகை. 
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றியடைந்த தனது படத்தை பிரகாஷ் ராவ் இந்தியில் ராஜேஷ் கண்ணா, ஹேம மாலினி ஆகியோரை வைத்து எடுத்து வெற்றிகண்டார். வெளிவந்த எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன ‘வசந்த மாளிகை’ படத்தை இப்போது தமிழில் ரீரிலீஸ் செய்கின்றனர். பழைய படங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில், இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மெருகூட்டி ரசிகர்களுக்காக ரீரிலீஸ் செய்கின்றனர். http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1860
சிவாஜி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் சிவாஜி நடித்த மற்றொரு படமான வசந்தமாளிகை ரீரிலீஸ் செய்யப்படுவது அந்த கால படங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை வெள்ளித்திரையில் காண முடியாமல் போன இன்றைய இளைய தலைமுறையினருக்கும் கிடைக்கும் திரைவிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக