புதன், 14 நவம்பர், 2012

தனிநாடு கோரும் டெக்ஸாஸ் மாநில அமெரிக்கர்கள்

தனிநாடு கோரும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல பல மாநிலங்களும் வெள்ளை மாளிகைக்கு மனு
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்ல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகைக்கு மனுச்செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்தே பலர் இவ்வாறு மனுச்செய்துள்ளனர். வெள்ளை மாளிகை இணையதளத்தின் மக்கள் முறைப்பாட்டைத் தெரிவிக்கும் பக்கத்திலேயே அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லும் மனுக்கள் குவிந்துள்ளன.
இதில் அமெரிக்காவின் 20 மாநிலங்களில் இருந்து இவ்வாறான மனுக்கள் குவிந்துள்ளன. அமெரிக்க அரசியல் அமைப்பில் எந்த மாநிலமும் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதை அங்கீகரிக்கும் வாக்கியங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த மனுக்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த மனுவில் ஒரு மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைச்சாத்திட்டால் அது குறித்து ஜனாதிபதி ஒபாமா விளக்கம் அளிப்பார் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் டெக்ஸாஸ் மாநிலத்தில் மூன்று தினங்களுக்குள் அமெரிக்காவில் இருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரம் பெற 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைச்சாத்திட்டிருந்தனர். அமெரிக்க சிவில் யுத்தம் இடம்பெற்ற போதே கடைசியாக பல மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.http://www.sooddram.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக