வெள்ளி, 30 நவம்பர், 2012

அதிமுக பிரமுகர் கொலையை விசாரித்த எஸ்.ஐ விபத்தில் கொலை/சாவு



 si who was probing admk functionary murder case killed
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ. விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை தாலுகா காவல்நிலைய எஸ்.ஐ. சபாபதி வயது 27. சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமியக்கப்பட்டார்.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய மதுரை மாவட்ட கூலிப்படையினர் கொந்தகை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவே அது குறித்து விசாரணை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவருடன் தலைமைக் காவலர் வெள்ளைத்துரை என்பவரும் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
விசாரணையை முடித்துவிட்டு திருப்புவனம் வழியாக சிவகங்கை திரும்பிக்கொண்டிருந்தார். மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் அருகே வரும் போது எதிரே வந்த லாரி எஸ்.ஐ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.http://tamil.oneindia.in/

முதலில் சென்ற தலைமைக் காவலர் வெள்ளைத்துரை திரும்பி வந்து பார்த்த போது எஸ்.ஐ. சபாபதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து உடனடியாக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வெள்ளைத்துரை தகவல் தெரிவித்தார்.
எஸ்.ஐயின் உடலைக் கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த எஸ்.ஐ. சபாபதி மதுரை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். பணியில் சேர்ந்து மூன்று மாதம்தான் ஆகிறது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட திருப்பாச்சேத்தி காவல்நிலைய எஸ்.ஐ. ஆல்வின் சுதனுடன் ஒன்றாக பயிற்சி பெற்று பணியில் சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டத்தில் பணியில் சேர்ந்து இரண்டாவதாக இவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக