வெள்ளி, 9 நவம்பர், 2012

கர்நாடக ஜனதா பக்‌ஷா எதியூரப்பா தனிக் கட்சி

 Yeddyurappa S New Party Contest On இடைக்கால தலைவர் தனஞ்செய் குமார்!

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ‘கர்நாடக ஜனதா பக்‌ஷா'(கேஜெபி) என்ற புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். இக்கட்சியின் இடைக்கால தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தனஞ்ஜெய்குமாரை நியமித்திருக்கிறார் எதியூரப்பா.
பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கையோடு டிசம்பர் 9- ந்தேதி அதிகாரப்பூர்வமாக தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்றார் எதியூரப்பா. இதன் முதல் கட்டமாக இன்று கர்நாடக ஜனதா பக்‌ஷா என்ற கட்சிக்கு தமது ஆதரவாளரான தனஞ்ஜெய்குமாரை நியமித்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் எதியூரப்பா கட்சி போட்டியிட இருக்கிறது. http://tamil.oneindia.in/#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக