வெள்ளி, 23 நவம்பர், 2012

கொசு ஒழிப்பு மட்டும் சிறப்பாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்

சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில் செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன் பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட் வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்., கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது.  http://tamil.oneindia.in/
Kanal - Chennai,இந்தியா
2012-11-23 05:16:12 IST
இப்போதாவது புரிந்ததே...திறமையற்ற ஆட்சி நிர்வாகத்திறன் சற்றும் இல்லாத ஒரு கூட்டம் பதவியில் அமர்ந்துகொண்டு அனைத்து நிலையிலும் தோல்வியைத் தழுவி மாநில மக்களுக்கு பெருந்துன்பம் விளைவித்து வருகிறது. அரசு பணிகள் முடங்கிவிட்டன. குறிப்பாக சுகாதரத்துறை எந்த விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மந்திரிகளுக்கே டெங்கு காய்ச்சல் வந்து படுத்து கிடக்கும் அவலம் தொடருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடுகள் இருப்பதாக இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு டெங்கு காய்ச்சல் வந்து விட்டது. இந்தத் கொசு தொல்லையைத் தாங்கமுடியலைப்பா!...



விளையாட்டுக்கும் சிரிப்புக்கும் சொன்ன இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா என்ற வாசகம் இப்போது அனைவரையும் உள்ளார பாதித்த குமுறலாக ஒலிக்கிறது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் யாருக்கு கடித்தால் எனக்கென்ன என எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அலுவலர்கள் என ஏ.சி., அறையில் தூங்கும் அதிகாரிகள் கொசுக்கடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதே இதற்கான உண்மை. காய்ச்சல் வந்தது இறந்து விட்டார்: இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு ஒழிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடந்தாலும் எவ்வித சீரிய நடவடிக்கையும் சொல்லும்படியாக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெருகி வருகிறது. காய்ச்சல் வந்தது இறந்து விட்டார் என்று பல சாவுகள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் மட்டும் இதுவரை 44 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமானது ஆனால் வெளியே வராத சாவுகளும் உண்டு. தமிழகத்தில் இது வரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் ஒரு தொகுதிக்கு தலா 2 பேர் வைத்தாலும் ( 234 எம்.எல்.ஏ.,க்கள் ) 468 பேர் இறந்திருக்கலாம். பொது இடங்களில் ஆட வைத்த கொசு: குறிப்பாக தற்போது சுகாதாரம் என்ன விலை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனால் கொசுக்கள் இனப்பெருக்கம் பல மடங்காக பெருகிஉள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழிவுநீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடு இருப்பதாக இல்லை. குடி நீர் கேட்டு மறியல் செய்த காலம் போய் தற்போது மின்வெட்டு கண்டித்து ஆங்காங்கே மறியல் நடக்க துவங்கியிருக்கிறது.கொசு ஒழிப்புக்கென போராட வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக ஆயத் துவங்கியிருக்கிறது. சாலையில் நிற்கும் மனிதர்கள் யாரும் அசையாமல் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி , விரட்டி கடித்து வருகிறது. அனைவரும் கை, கால்களை ஆட்டியபடியே தான் நிற்க முடிகிறது. அப்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா., என்பதே.
இந்த புலப்பம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ கேட்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம். இரவு நேரத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு கொசுக்கள் லட்சம், லட்சமாக பெருகி நிற்கிறது. மின்சாரம் போகும்போது உறக்கம் கலைந்தாலும் கொசுக்கள் வேறு கடித்து மக்களின் வேதனையை அதிகரிக்க செய்கிறது. இதற்கெல்லாம் அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும். அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., : கடந்த தி.மு.க., காலத்தில் மின்சாரம் துண்டிக்கும்போது அமைச்சர்ஆற்காட்டுக்கு விழுந்த அர்ச்சனைகள் இப்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லாமல் போகிறது. காரணம் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்றே மக்களுக்கு தெரியாமல் போனதே காரணம். தற்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., ஆனால் இவர் சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பாக சொல்லும்படியாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை. பிறகு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன..,


பயங்கரவாதிகள் ஒழிப்புக்கு பல ஆயிரம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு போல கொசுக்கள் ஒழிப்புக்கு மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கும்காலம் இது. இதனை தவிர்க்கும் போது யாரையும் நிம்மதியாக வாழ விடாமல் ஆக்கிவிடும் இந்த சின்னஞ்சிறு கொசு. மனித இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும். எனவே போர்க்கால நடவடிக்கையாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களம் இறங்க வேண்டும் என கொசுத்தொல்லையால் அவதிப்பபடும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக