வியாழன், 22 நவம்பர், 2012

அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு உறவினருக்கு அரசு நிலத்தை வழங்கிய வழக்கு

திருவனந்தபுரம்: தனது உறவினர் ஒருவருக்கு அரசு நிலத்தை வழங்கிய வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள எதிர்கட்சி தலைவரான அச்சுதானந்தன் கடந்த 2006-2011ல் முதல்வராக இருந்தார். அப்போது காசரக்கோட்டைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆட்சி மாறியதும் இது தொடர்பாக அச்சுதானந்தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை கோழி்க்கோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. http://tamil.oneindia.in/

அதில் கூறியிருப்பதாவது,
காசரக்கோட்டைச் சேர்ந்த உறவினருக்கு அச்சுதானந்தன் அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்து விட்டது. இது தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்பட மேலும் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு்ள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக