ஞாயிறு, 18 நவம்பர், 2012

தினமலரின் அரிய கண்டு பிடிப்பு: பார்லிமென்டில் பதுங்கி பாய தி.மு.க., முடிவு

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு விவாதம் கொண்டு வரப்பட்டால், அதில் பங்@கற்காமல், புறக்கணிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் ஆயுள் காலம் முடியும் வரை, தி.மு.க., அங்கம் வகிக்கவும், கடைசி நேரத்தில் புது அணியை உருவாக்கிய பின், காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டி விடவும், தி.மு.க.,திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/
இம்மாதம், 22ம் தேதி, பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது. ஒரு மாத காலம் நடக்கும் கூட்டத் தொடரில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி குறித்த புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பார்லிமென்டில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த நோட்டீசை ஏற்றுக் கொண்டு, ஓட்டெடுப்பு நடத்தப்படுமா அல்லது ஓட்டெடுப்பு நடத்தாமல், அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில், தி.மு.க., என்ன முடிவு எடுக்கப் போகிறது என, தேசிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம், பார்லிமென்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஓட்டெடுப்பில் பங்@கற்காமல், தி.மு.க., புறக்கணிக்கும் முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:"2 ஜி' வழக்கு தொடர்பான விசாரணையை முன் வைத்து, தி.மு.க.,வை மிரட்டியே, சட்டசபை தேர்தலில், 63 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதில், ஐந்து இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட்டு, 5 சதவீதம் ஓட்டுகளே பெற்றது. எனவே, தமிழகத்தில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு, இனி முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என, தி.மு.க., கருதுகிறது.

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில்லை என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதனால் தான் அகில இந்திய அளவில் நடந்த, "பந்த்' போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு வழங்கியது. தற்போது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், தி.மு.க.,-எம்.பி.,க்கள் அதில் பங்@கற்காமல் புறக்கணிப்பர்.வர்த்தகர்கள் பாதிக்காமல் இருப்பதற்கு, மசோதாவில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., குரல் கொடுக்கும் வாய்ப்புள்ளது. எந்த கட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான நிலையை எடுக்க தி.மு.க., விரும்பவில்லை.

இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவையும் தி.மு.க., எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக