சனி, 17 நவம்பர், 2012

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.
"நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை. www.dinamalar.com/


உண்மை நிலையை கவனத்தில் :
கர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, "மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக