வியாழன், 1 நவம்பர், 2012

சோனியா, ராகுல் மீது சு.சுவாமி பரபரப்பு மோசடி புகார்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் வத்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய புகாரின் பேரலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை! அதற்குள் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது அதிர்வலைகளைக் கிளப்பும் புகார்களை சுமத்தியிருக்கிறார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி!
சுப்பிரமணிய சுவாமி சொல்லும் அதிரடிப் புகார் தான் என்ன?
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குதாரர்களாக இருப்பவர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இது ஒரு தனியார் நிறுவனம். ஏஜேஎல் என்ற அசோசியேட் ஜேர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பொதுத் துறை நிறுவனம். ஏஜே எல் நிறுவனத்தின் சொத்துகளை சோனியாவும் ராகுல் காந்தியும் உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக கபளீகரம் செய்தது என்பதுதான் சுப்பிரமணியசுவாமியின் புகார்
அப்படியென்ன முறைகேடு செய்தார்கள்?
ஏஜேல் நிறுவனத்துக்கு டெல்லியில் ரூ1,600 கோடி மதிப்பிலான ஹெரால்ட் ஹெளஸ் இருக்கிறது. இந்த இடத்தை நிர்வகிப்பது சோனியா- ராகுலின் நிறுவனமான யங் இந்தியாதான்!
சரி இந்த ஏஜேஎல் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் யார் தெரியுமா? காங்கிரஸ் கட்சிப் பொருளாளர் மோதிலால் வோராதான்! ஏஜேஎல் நிறுவனத் பங்குதாரர்களாக் இருப்பவர்கள் யாரெல்லாம் தெரியுமா? மறைந்து போன ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பெரோஸ் காந்தி, பிர்லா இவர்கள்தான். இப்படி இறந்துபோனவர்களெல்லாம் கூடித்தான் சோனியா நிறுவனத்துக்கு ஹெரால்ட் ஹெளஸை கொடுக்கச் சொன்னார்களாம்!

இதைவிட முக்கியமானது! காங்கிரஸ் கட்சியே சோனியாவின் யங் இந்தியாவின் நிறுவனத்துக்கு கடனெல்லாம் கொடுக்க பரிந்துரைத்ததாம்...
மேலும் யங் இந்தியா என்ற சோனியாவின் தனி நிறுவனத்துக்கான ஆலோசனைக் கூட்டம் அரசு இல்லமான 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் வீட்டில் நடைபெற்றதும் சட்டத்துக்குப் புறம்பானது என்கிறார் சுவாமி!
இப்படி ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுகஒகிக் கொண்டே போகும் சுப்பிரமணியசாமி ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுத்திருக்கிறார். அதாவது மக்களவைத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது ராகுல் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் யங் இந்தியா பற்ற் குறிப்பிடப்படவே இல்லையாம்!
இதனால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அஸ்திரத்தை எய்திருக்கிறார் சுப்பிரமணியசுவாமி. ஆனால் காங்கிரஸ் கட்சி இப்புகாரை நிராகரித்திருக்கிறது. http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக