திங்கள், 5 நவம்பர், 2012

வெளிநாட்டுப் பறவைகள் வருகை வேதாரண்யம்

கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை; நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும்.
;இங்கு வரும் பறவைகளில் பெரும்பாலானவை ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து செல்பவை.<பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் இப்பகுதிக்கு ஆண்டுதோறும் 247இனங்களைச் சேர்ந்த பறவைகள் வந்து செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப்பருவ மழை கடந்த மாதத்தில் தொடங்கியதையடுத்து பறவை இனங்கள் வரத் தொடங்கியுள்ளன.மழைப் பொழிவுக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் கூட்டம் இப்போது காணப்படுகிறது.
பூநாரை, கூழக்கிடா, செங்கால் நாரை இனம், கடல் காகம், மெலிந்த மூக்கு காடல் காகம், கடல் ஆலாக்கள் உள்ளான் வகைகள், சிறவி இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.அண்மையில் ஏற்பட்ட புயலையொட்டி பெய்த கனமழை காரணமாக ஏரிகள் உள்ளிட்ட பறவைகளின் வசிப்பிடங்களில் தண்ணீரின் அளவு சற்று அதிகமாக உள்ளதால் பறவைகள் வழக்கமாக காணப்படும் இடங்களை விட்டு சற்று தொலைவில்தான் உள்ளன.சரணாலயப் பகுதிக்குள் வந்துள்ள பறவைகள் கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகள், நீர்நிலைகளில் இரைதேடச் செல்லும்போது அவை வேட்டையாடப்படுகின்றன.இதனை தடுக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர் http://www.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக