ஞாயிறு, 4 நவம்பர், 2012

உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார் எடுபிடி வேலை

கோவை:தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார், "ஆர்டர்லி' (எடுபிடி) வேலை செய்கின்றனர். போலீஸ் வேலையே செய்யாத இவர்களுக்கு, ஆண்டு தோறும் 120 கோடி ரூபாய் வரை, அரசு கஜானாவில் இருந்து ஊதியமாக வழங்கப்பட்டு, நிதி வீணடிக்கப்படுகிறது. தமிழக காவல்துறையில் காவலர், ஏட்டு, எஸ்.ஐ.,- இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., - கூடுதல் எஸ்.பி., - எஸ்.பி., - டி.ஐ.ஜி., - ஐ.ஜி., - ஏ.டி.ஜி.பி., - டி.ஜி.பி., பதவி நிலைகள் வரை, ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 5,000 காவலர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில், "ஆர்டர்லி' வேலை செய்கின்றனர். இவ்வேலையில் ஈடுபட்டுள்ள போலீசார், அன்றாட போலீஸ் நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை. அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே, பதவி உயர்வு, "காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததாக ரிவார்டு' களை பெற்றுக் கொள்கின்றனர். அதிகாரிகள் சிலரது வீடுகளில், எஸ்.ஐ., அந்தஸ்தில் உள்ளவர்களும் கூட, எடுபிடி வேலை செய்கின்றனர்.காவலர், ஏட்டு எஸ்.ஐ.,களின் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை. தமிழகம் முழுவதும் பணியாற்றும் 5,000 போலீஸ் "ஆர்டர்லி'களுக்கு, அரசு கஜானாவில் இருந்து, மாதம்தோறும் 10 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. என்னமோ புதுசா சொல்வது போல சொல்கிறீர்கள் ?? காலம் காலமாக நடந்துவரும் வேலை தானே ... திமுக ஆட்சியில் 80 % இருந்தது , அதிமுக ஆட்சியில் 90 % ஆகியுள்ளது அவ்வளவே ... முதலில் தொந்தி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு இல்லை , வேலை பறிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் ...


இந்த ஊதியத்தை பெறும் போலீசார், அதற்குரிய வகையில் போலீஸ் பணியாற்றுவதில்லை. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ஆங்கிலேயர் கால "ஆர்டர்லி' முறையை ஒழிக்க, தமிழகத்தில் 1984ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், டி.எஸ்.பி., வீடு முதல் உயரதிகாரிகளின் வீடு வரை அனைத்து மட்டத்திலும் ஆர்டர்லி முறை உள்ளது. இதை ஒழிக்க, அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகள், போலீஸ் பணியாற்றாததால், மற்ற போலீசாருக்கு கடும் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இந்த அடிமை முறைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றனர்.

ஆர்டர்லி முறை குறித்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:போலீஸ் உயரதிகாரிகள் வசிக்க, அரசு சார்பில் பங்களா வழங்கப்படுகிறது. மாவட்டம், மாநகர போலீஸ் நிர்வாகங்களில் இதுபோன்ற பங்களாக்கள் உள்ளன. இவற்றை பராமரிக்க ஆட்கள் தேவை. வெளியாட்களை வேலைக்கு அமர்த்தினால், சம்பளம் தர வேண்டியிருக்கும். நான்கு, ஐந்து பேரை வேலைக்கு வைத்தால், மாதம் தோறும் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் வரை, அதிகாரிதான் ஊதியம் வழங்க வேண்டியிருக்கும். அதுவே, போலீசாரை பணியமர்த்தினால் பிரச்னை இல்லை.

இந்த வேலைகளில் ஈடுபடுமாறு, விருப்பமில்லாத போலீசாரை நிர்பந்திப்பதில்லை; அவ்வாறு செய்யவும் முடியாது. காவலர்கள் சிலர், காலங்காலமாக, ஆர்டர்லியாக பணியாற்றி, அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்றவர்களாக இருப்பர்; அவர்களே, தொடர்ந்து அப்பணியில் நீடிப்பர். புதிய நபர்களை அழைத்தால் வரமாட்டார்கள்.

போலீஸ் உயரதிகாரிகளின் குடும்பத்துக்கும் சில, அன்றாட தேவைகள் உள்ளன. 24 மணி நேரமும் துறைசார்ந்த பணியில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள், குடும்பத்துக்கான தேவைகளுக்கு போலீசாரின் உதவியை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. அரசாணை மூலமாக, இதுபோன்ற "நிலை'யை ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதே வேளையில், ஆர்டர்லிகளை அதிகளவில் வைத்துக்கொள்ளாத உயரதிகாரிகளும் நிறையப் பேர் உள்ளனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக