ஞாயிறு, 4 நவம்பர், 2012

ராமதாஸ்: 32 அமைச்சர்களை கொலு பொம்மைகள் மாதிரி

ரொம்ப அசிங்கமா இருக்கு, கேவலமா இருக்கு''... ராமதாஸ் டென்ஷன்!

சென்னை: நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று பத்திரிகைகளில் இந்த அரசு விளம்பரம் செய்திருப்பது அசிங்கமான வார்த்தை, கேவலமான வார்த்தை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
கோடி கணக்கில் செலவு செய்து இந்த அரசு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருக்கிறது. நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்பது அசிங்கமான வார்த்தைகள். கேவலமான வார்த்தைகள்.
நூறாண்டெல்லாம் உங்களை பேசமாட்டாங்க. 2016ல் உங்க கட்சியை சுத்தமா இல்லாம போய்விடும். ஒவ்வொரு துறையிலும், இந்த ஆண்டு இவ்வளவு செலவு செய்தோம் என அமைச்சரோ, அந்ததுறை இயக்குநரோ அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் இதுவரைக்கும் பார்த்தீர்கள் என்றால், ஆயிரத்து 900 அறிக்கைகள் முதல்வர் பெயரில் வந்திருக்கிறது. அப்புறம் எதற்கு அமைச்சர்கள்.

இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் கொலு வைத்திருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்திருப்பீர்கள். நிறைய பொம்மைகள் வைத்திருப்பார்கள். அதேபோல் 32 அமைச்சர்களை ஒரு கொலு பொம்மைகள் மாதிரி வைத்திருக்கிறார் இந்த முதல்வர் என்றார் ராமதாஸ்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக