செவ்வாய், 13 நவம்பர், 2012

2012ல் பிறக்கும் குழந்தைகளில் 3ல் 1 குழந்தை 100 வயது வாழும்

லண்டன்: 2012ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012ல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.http://tamil.oneindia.in/

இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்குமாம். நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983ல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ரிட்டையர் ஆவார்களாம்.
2012 பிறந்த பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண்கள் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக