திங்கள், 26 நவம்பர், 2012

திமுக நோட்டீஸ்! 2ஜி தொடர்பான சிஏஜி அறிக்கை- பார்லி.யில் விவாதம் கோரிகிறது DMK

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என சிஏஜி அதிகாரி ஆர்.பி.சிங் கூறிய கருத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.
2ஜி அலைக்கற்றையை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாலேயே ரூ1.76 லட்சம் கோடி இழப்பு என்று சிஏஜி அறிக்கை தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கியது திமுக. மத்திய அமைச்சர்களாக இருந்த திமுகவின் ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் பதவி இழக்க நேரிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் சிஏஜியில் தொலைத் தொடர்புத் துறைக்கான தணிக்கை அதிகாரியாக இருந்த ஆர்.பி.சிங், 2ஜி தொடர்பான சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் இழப்பு மிகைப்படுத்தப்பட்டது என்றும் அந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்றும் கூறினார். நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவரும் மூத்த பாஜக தலைவருமான முரளிமனோகர் ஜோஷிக்கு இதில் பங்கிருக்கிறது என்று முதலில் ஆர்.பி.சிங். கூறினார். பின்னர் முரளி மனோகர் ஜோஷியின் பெயரை குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் என்றுதான் கூறியதாகவும் முரண்பட்ட தகவலை ஆர்.பி.சிங். தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக