சனி, 24 நவம்பர், 2012

சோனியா: 2ஜி விவகாரத்தால் ஆதாயம் பார்த்த BJP, ADMK

புதுடில்லி:"2ஜி' முறைகேடு குறித்து, சி.ஏ.ஜி.,யின் ஆய்வில், முரளி மனோகர் ஜோஷி குறுக்கிட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து பார்லிமென்ட்டுக்கு வெளியே பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில்,""2ஜி விவகாரத்தை கிளப்பி, ஆதாயம் பார்த்த பாரதிய ஜனதாவின் சாயம் வெளுத்துவிட்டது. இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,""2ஜியில் குறிப்பிடப்பட்ட இழப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. உண்மை நிலை என்ன என்பது இப்போது வெளியாகிவிட்டது. இதை மக்கள் அறிந்து கொள்வர்,'' என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக