ஞாயிறு, 4 நவம்பர், 2012

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள மலைசரிவுகள் மற்றும் சாலையோரங்களில் குறிஞ்சி செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. எடக்காடு அருகேயுள்ள பிகுளி, கேகாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செடிகளில் குறிஞ்சி பூ அதிகளவு தற்போது பூத்து குலுங்குகின்றன. வெளிர் ஊதா நிறத்தில் கொத்து, கொத்தாக குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. குறிஞ்சி மலரில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒரு சில மலர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 12 ஆண்டுக்கு ஒரு முறை, 36 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது. மஞ்சூர், எடக் காடு பகுதியில் பூத்து குலுங்கும் மலர்கள் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டவை. இவை ஸ்டெபுளன்தஸ் குந்தியா னம் என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. பூவில் இருந்து இயற்கையாக கிடைக்கும் தேன் சுவையானது என்பதால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் மலரை சுற்றி வருகின்றன. சுற்றுலா பயணிகள் மலர்களை பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.http://www.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக