வெள்ளி, 2 நவம்பர், 2012

நொய்டா பார்முலா 1 கார் பந்தயம் 1.15 லட்சம் பீர் பாட்டில் காலி

நொய்டா: பார்முலா 1 கார் பந்தயத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பீர் பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர் என்ற தகவலை கலால் வரித்துறை தெரிவித்துள்ளது.நொய்டாவில், உலக பிரசித்தி பெற்ற சர்வதேச அளவிலான பார்முலா 1 கார் பந்தயம் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ரேஸ் கிளப் உரிமையாளர்கள் மற்றும் உலக அளவில் பிரபலமான வீரர்கள் பங்கேற்றனர். போட்டி நடைபெற்ற இடத்தில் மதுபானங்கள் விற்க குறிப்பிட்ட சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில், போட்டி நடைபெற்ற 3 நாட்கள் மட்டும் விற்பனையான மதுபான விவரங்கள் குறித்து மாவட்ட கலால் வரித்துறை அதிகாரி குல்தீப் வெளியிட்ட அறிக்கை:இந்த ஆண்டு 3 நாள் நடந்த பார்முலா 1 கார் பந்தயத்தில், 1.15 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையானது. இதனால் அரசுக்கு ரூ.42 லட்சம் கலால் வரி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 50,000 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்றது. இதனால் கடந்த ஆண்டு அரசுக்கு ரூ.16 லட்சமே கலால் வரி கிடைத்தது. இந்த ஆண்டு பிராந்தி மற்றும் விஸ்கி இரண்டும் சேர்ந்து 11 ஆயிரம் பாட்டில்கள் விற்பனையானது.  கடந்த ஆண்டு 10 ஆயிரம் பாட்டில்கள் விற்றன. http://www.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக