வெள்ளி, 2 நவம்பர், 2012

தமிழ் பட கதைகள் பிடிக்கவில்லை : மதுஷாலினி தடாலடி

சென்னை: தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. ‘அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி. இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பூத் ரிட்டர்ன்ஸ்Õ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மது ஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தபிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது. பாலிவுட்டில் புதிய பட குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன்.


அதேபோல் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். அதுவும் திகில் படம்தான். ‘பூத் ரிட்டர்ன்ஸ் பட ஷூட்டிங்கில்  திகில் காட்சிகளில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. இயக்குனர், பட குழுவினர் என்னை சுற்றியே இருந்ததால் பயம் தெரியவில்லை. இதே படத்தை தியேட்டரில் பார்த்தபோது நடுங்கிவிட்டேன். திகில் காட்சிகளில் எப்படி நடித்தேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எந்த கதையும் மனதை கவரவில்லை. இதையடுத்து மும்பையில் குடியேற முடிவு செய்திருக்கிறேன். அங்கேயே தங்கியிருந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். மும்பை எனக்கு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. அதை அனுபவிக்கிறேன். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக