வியாழன், 4 அக்டோபர், 2012

Super Singer Junionr 3 வைல்ட் கார்டு கடுமையான போட்டி

ஓட்டுக்கேட்டு பாட்டு பாடும் குட்டீஸ்கள்!Posted by: Mayura Akilan

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இப்பொழுது வைல்ட்கார்டு சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இறுதிச்சுற்றுக்கு தங்களைச் தேர்வு செய்யச் சொல்லி ஓட்டுகேட்டு பாட்டு பாடுகின்றனர் 10 குட்டீஸ்கள். இவர்களில் யாழினி, அஜீத் இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் நடைபெற்று வரும் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் ஏற்கனவே மூன்று குழந்தைகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். தற்போது நான்காவதாக ஒரு போட்டியாளரைத் தேர்வு செய்வதற்காக வைல்ட்கார்டு சுற்று நடைபெற்று வருகிறது.
இதுநாள் வரை பாடிய குழந்தைகளில் 10 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாட அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் தங்களின் திறமையை அழகாக வெளிப்படுத்திவருகின்றனர்.
ஒவ்வொரு போட்டியாளரும் ரசிகர்களை கவர்வதாக சிறப்பான பாடல்களைப் பாடி ஒட்டுகேட்கின்றனர். வைல்ட்கார்டு சுற்றில் பங்கு பெரும் பத்து குழந்தைகளைமட்டும் வைத்து அவர்கள் ஓட்டுகேட்பதையே தனியாக பாடலாக எடுத்து ஒளிபரப்புகின்றனர். அது கூட வித்தியாசமாக அழகாக இருக்கிறது. ‘ஓட்டுக்கேட்டு பாட்டு பாடுறோம். எங்களுக்கு ஓட்டுப் போடாட்டி உங்க பேச்சு கா' என்று செல்லக்குழந்தைகள் கேட்பது கூட அழகாக இருக்கிறது.
இந்த பத்து போட்டியாளர்களில் இதுவரை யாழினியும், அஜித்தும் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுக்குத்தான் எஸ்.எம்.எஸ் ஓட்டு அதிகம் கிடைத்திருக்கிறதாம். இன்னும் இரண்டுநாட்கள் மட்டுமே இருக்கின்றன. அக்டோபர் 5ம் தேதியுடன் ஒட்டுபோடும் நேரம் முடிந்துவிடும். யாழினி ஏற்கனவே சுகன்யா, பிரகதி, கவுதமுடன் இறுதிச் சுற்று போட்டியாளர்களுடன் பாடி இருக்கிறார். வைல்ட் கார்டு சுற்றில் யாழினி பாடிய பழம் நீயப்பா பாடல் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது. அஜீத் தன்னுடைய செல்லக்குரலால் நடுவர்கள் உஷா உதூப், புஷ்பவனம் குப்புசாமி, விஜய் யேசுதாஸ் ஆகியோரையே கலங்க வைத்திருக்கிறான். 10 போட்டியாளர்களில் இவர்கள் இருவருமே வயதில் சிறியவர்கள் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் இவர்களுக்கு ஓட்டளித்திருக்கின்றனர். இதில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றில் நுழையப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக