சனி, 6 அக்டோபர், 2012

S.M.Krishna:தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்

 Stop Release Cauvery Water Sm Krishna To Pm தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம்

பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடுவதை நிறுத்துவதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை உடனே வெளியிடப்பட வேண்டும். கர்நாடகத்தில் தற்போது நிலவும் மோசமான நிலையை தடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக